ADDED : டிச 21, 2024 05:26 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரில் வி.சி.,கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அம்பேத்கர் குறித்து விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அமித்ஷா பதவிவிலக கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வி.சி.,கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார்.
இதில் விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ஷீலாதேவி, நிர்வாகிகள் சிந்தனைவேந்தன், கோட்டிபாலா, பாரதிநாகப்பன் விடுதலைசெல்வன், தமிழாதவன், பிரபாகரன் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
