ADDED : செப் 22, 2024 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் ஒன்றிய வி.சி., செயற்குழு கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜான் வரவேற்றார்.
மகளிர் அணி ஒன்றிய செயலாளர்கள் அலமேலு, தேவி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜாராமன், பிச்சாண்டி, சுந்தரமூர்த்தி, தேவகுமார், மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், வடக்கு மாவட்ட மேலிட பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி உளுந்துார்பேட்டையில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு 20 வாகனங்களில் மகளிர்களை அழைத்து செல்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.