/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கல்வி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் வி.சி., பொதுச் செயலாளர் கோரிக்கை

ADDED : டிச 06, 2024 06:32 AM
விழுப்புரம் : 'நிலத்தடி நீர் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்' என வி.சி., மாநில பொது செயலாளர் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நேற்று அவர் கூறியதாவது:
விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பொதுமக்கள், விவசாயிகள் பாதித்திருப்பது போல சிறு வியாபாரிகள், தொழில் முனைவோரின் வாழ்வாதாரமும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழக அரசு பல முயற்சிகளை முனைப்போடு செய்தாலும் கூட, விழுப்புரம் மாவட்டத்தில் 15 பேர் வெள்ள பாதிப்பால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் வேதனை தருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தங்கு, தடையற்ற குடிநீர், 3 வேளை உணவு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில் உரிய கணக்கீடு செய்து உரிய முறையில் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
விழுப்புரம், கடலுார் பகுதிகளில் மக்கள் அடியோடு வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் இங்குள்ள கல்லுாரி மாணவர்கள் இந்தாண்டு கல்வி கட்டணம் கட்டணத்தை முழுமையாக அரசு ஏற்க வேண்டும்.
நிலத்தடி நீர் மேலாண்மைக்காக ஒரு அமைப்பு தமிழக அரசிடம் இல்லை. நிலத்தடி நீர் மேலாண்மை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். அனைத்து ஓடைகள், வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சிந்தனைச் செல்வன் கூறினார்.