ADDED : ஜன 22, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி, - செஞ்சியில் வி.சி., கட்சியினர் சார்பில் திருச்சியில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள மாநாடு குறித்த ஊர்வலம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் தனஞ்செழியன் தலைமை தாங்கினார்.
துணை அமைப்பாளர் அரசு, மாநில துணைச் செயலாளர்கள் துரை வளவன், இனியவளவன் முன்னிலை வகித்தனர். மகளிர் விடுதலை இயக்கம் மனோன்மணி, பாரதி வரவேற்றனர்.
மாவட்ட துணைச் சேர்மன் ஷீலாதேவி ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். பேரூராட்சி அலுவலகம் எதிரே இருந்து துவங்கிய ஊர்வலம் கூட்ரோட்டில் முடிவடைந்தது.
அங்கு, மாநில துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எழில் கரோலின் பேசினார்.
ஆரணி தொகுதி மேலிட பொறுப்பாளர் நந்தன், அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் மழைமேணி பாண்டியன், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் செஞ்சுடர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஜான்சிராணி நன்றி கூறினார்.