sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பஸ் கண்ணாடி உடைத்த வழக்கு வி.சி.,பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை

/

 பஸ் கண்ணாடி உடைத்த வழக்கு வி.சி.,பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை

 பஸ் கண்ணாடி உடைத்த வழக்கு வி.சி.,பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை

 பஸ் கண்ணாடி உடைத்த வழக்கு வி.சி.,பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : பிப் 19, 2026 06:54 AM

Google News

ADDED : பிப் 19, 2026 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் வி.சி., பிரமுகருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டிவன மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு ஓட்டல் எதிரில், 14.3.2023 அன்று, கடலுாரிலிந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பஸ் காலை 7:15 மணியளவில் நின்றிருந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரியை சேர்ந்த டிரைவர் ஜெயராமன் பணியில் இருந்துள்ளார்.

அப்போது, திடீரென ஒருவர் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டார்.

இது குறித்து டிரைவர் ஜெயராமன் திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி விசாரணை நடத்தி, திண்டிவனம் கிடங்கல்(2) பகுதி, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த வி.சி., பிரமுகர் தென்னரசு; 47; என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ேஹமானந்தகுமார், குற்றம் சாட்டபட்ட தென்னரசுவிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.






      Dinamalar
      Follow us