ADDED : மார் 15, 2024 11:14 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசை கண்டித்து வி.சி., கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் பொன்னி வளவன், திலீபன், விடுதலைச்செல்வன், மேலிட பொறுப்பாளர் நாவரசு முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் கண்டன உரையாற்றினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், வி.சி., மேலிட பொறுப்பாளர் குணவழகன், செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, மாநில துணைச் செயலாளர் சித்தார்த்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், நாட்டில் குடியுரிமைச் சட்டம் மதச்சார்பின்மையை சிதைக்கும். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும். இதனால், இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.
