UPDATED : நவ 28, 2026 08:30 PM
ADDED : நவ 28, 2026 08:28 PM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மத்திய அரசை கண்டித்து வி.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வளவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெற்றிவேந்தன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் திருவேந்தன், வழக்கறிஞர் ஏழுமலை, மாவட்ட துணைச் செயலாளர் சந்துரு முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்தரசன் வரவேற்றார்.
தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோரி மத்திய அரசை கண்டித்து மாநில அமைப்பு செயலாளர் தலையாரி இருசப்பன், எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் பரசுராமன், விக்கிரவாண்டி தொகுதி ஒன்றிய செயலாளர்கள் கண்டன உரையாற்றினர்.
நகர செயலாளர் சிவராமன் நன்றி கூறினார்.
