ADDED : ஜூலை 05, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார், : வானுார் தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், திருச்சியில் வி.சி.க., சார்பில் நடந்த 'மதச்சார்பின்மை காப்போம்' பேரணி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., பேசினார்.
கூட்டத்தில், வானூர் சட்டசபை தொகுதி செயலாளர் பால்வண்ணன், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் நாகஜோதி, மாநில துணைச் செயலாளர்கள் இளங்கோவன், புஷ்பகாந்தன், இனியவன், மண்டல துணைச் செயலாளர் எழில்மாறன், மாவட்ட செயலாளர்கள் திலீபன், தனஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், தமிழ்குடி, தமிழ்செழியன், ஈழத்தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.