/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் வேட்டி தின விழா
/
அரசு மருத்துவமனையில் வேட்டி தின விழா
ADDED : ஜன 07, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சர்வதேச வேட்டி தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி நிர்வாக அலுவலர் சிங்காரம் தலைமை தாங்கினார். இளநிலை நிர்வாக அலுவலர் ஸ்ரீவத்சன் முன்னிலை வகித்தார். உதவியாளர் சுபாஷ் வரவேற்றார். அலுவலக கண்காணிப்பாளர் பிரேமா வாழ்த்திப் பேசினார்.
உலக வேட்டி தினத்தையொட்டி, அலுவலக பணியாளர்கள் அனைவரும் வேட்டி கட்டி பணிக்கு வந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இளநிலை உதவியாளர் ஆனந்தவளவன் நன்றி கூறினார்.