/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீராணம் தண்ணீர் செல்லும் பாலத்திற்கு ஆபத்து
/
வீராணம் தண்ணீர் செல்லும் பாலத்திற்கு ஆபத்து
ADDED : ஜன 09, 2025 07:15 AM

சேத்தியாத்தோப்பு : சென்னை - கும்பகோணம் சாலையில், கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் குறுகிய வளைவு பாலம் உள்ளது.
வீராணம் ஏரி தண்ணீர் வெள்ளாற்றுக்கு செல்லும் வகையில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இந்த பாலம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலுார், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன.
பாலம் மிகவும் குறுகியதாக உள்ளதால், கனரக வாகனங்கள் வளைந்து செல்லும்போது தடுப்பு சுவரில் உரசுகின்றன. பாலத்தில் கனரக வாகனங்கள் மோதியதில் தடுப்பு சுவர் ஷட்டர் பகுதியில், கட்டைகள் உடைந்து சேதமடைந்தன.
இது, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. பிளவு ஏற்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்தால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடைந்துள்ள தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

