/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் வாகனங்கள் வீணாகும் அவலம்
/
ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் வாகனங்கள் வீணாகும் அவலம்
ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் வாகனங்கள் வீணாகும் அவலம்
ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் வாகனங்கள் வீணாகும் அவலம்
ADDED : ஏப் 01, 2025 04:31 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாததால் மக்கி வீணாகி வருகிறது.
விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் உள்ளது.
இந்த துறை மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்,மினி லாரிகள், ஆட்டோக்கள், பைக்குகள் என பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அலுவலகம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய வாகனங்களை, அதன் உரிமையாளர் வழக்கை சந்தித்து மீட்கவில்லை என்றால், அந்த கால அவகாசம் முடிந்தவுடன் வாகனங்களை, போலீசார் பொது ஏலத்தில் விட்டு அதன் மூலம் வருவாயை அரசு கணக்கில் கருவூலத்தில் சேர்ப்பது வழக்கம்.
வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதால், வெயிலிலும், மழையிலும் வீணாகி வருகிறது.
எனவே, வழக்கு முடிந்த வாகனங்களை ஏலம் விட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.