/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தே.மு.தி.க., மாநாடு எதிரொலி டோல்கேட்டில் இலவசமாக கடந்த வாகனங்கள்
/
தே.மு.தி.க., மாநாடு எதிரொலி டோல்கேட்டில் இலவசமாக கடந்த வாகனங்கள்
தே.மு.தி.க., மாநாடு எதிரொலி டோல்கேட்டில் இலவசமாக கடந்த வாகனங்கள்
தே.மு.தி.க., மாநாடு எதிரொலி டோல்கேட்டில் இலவசமாக கடந்த வாகனங்கள்
ADDED : ஜன 10, 2026 07:08 AM
விக்கிரவாண்டி: வேப்பூர் தே.மு.தி.க., மாநாட்டிற்கு சென்ற கார், வேன், பஸ்கள் கட்டணமின்றி இலவசமாக டோல்கேட்டை கடந்து சென்றன.
கடலுார் மாவட்டம், வேப்பூர், பாசார் பகுதியில் நேற்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடந்தது.
மாநாட்டில் பங்கேற்க வடமாவட்டங்களிலிருந்து வேப்பூர் நோக்கி அக்கட்சியின் நிர்வாகிகள் கார், வேன், பஸ்களில் திரளாக புறப்பட்டு சென்றனர்.
விக்கிரவாண்டி டோல்கேட்டை பிற்பகல் 2:00 மணி முதல் வாகனங்கள் கட்சிக் கொடிகளுடன் கடக்கத் துவங்கின.
நேற்று மாநாட்டுக்கு சென்ற 7 பஸ்கள் உட்பட கார், வேன் என மொத்தம் 645 வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக கடந்து சென்றன.
அதே போன்று பெரம்பலுார், திருமாந்துறை டோல் கேட்டை 20 பஸ்கள் உட்பட கார், வேன் என மொத்தம் 1000 வாகனங்கள் இலவசமாக சென்றன.
நீண்ட நாட்களுக்கு பிறகு மாநாடு நடைபெற்றதால் தொண்டர்கள் வாகனங்களில் கரகோஷங்களுடன் மகிழ்ச்சியாக சென்று மாநாட்டில் பங்கேற்றனர்.