/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரத்தில் வேல் வீதியுலா
/
கண்டாச்சிபுரத்தில் வேல் வீதியுலா
ADDED : அக் 26, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் வீரபாகு தேவர்கள் வேல் வீதியுலா நடந்தது.
முன்னதாக நேற்று காலை வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து உற்சவமூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடந்தது.
இரவு ஓதுவார்கள் வீராசாமி, ஆறுமுகம் ஆகியோரின் கந்தபுராண வாசிப்பும், தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையின் தேவார, திருவாசக முற்றோதல் நடந்தது.
இதில் கண்டாச்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல் மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.

