ADDED : ஜன 02, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த கோட்டமருதுார் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடந்த முகாமிற்கு, விழுப்புரம் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் கருப்பண்ணன் குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கவுன்சிலர் பிரபு, ஜானகிராமன், அனிதா மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.முகாமில் குடற்புழு நீக்கம், சினை ஊசி, சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் விஜயா வீரக்கண்ணு செய்திருந்தார்.
வேல்முருகன் நன்றி கூறினார்.

