/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் செயல்படவில்லை! குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
/
மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் செயல்படவில்லை! குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் செயல்படவில்லை! குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் செயல்படவில்லை! குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ADDED : பிப் 23, 2024 11:45 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வராததால் சரியாக செயல்படவில்லை என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டி பேசினர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி தலைமை தாங்கினார்.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், டி.ஆர்.ஓ., சரஸ்வதி, மின்துறை மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, வேளாண் துணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் இளஞ்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் புகார் மற்றும் குறைகள் குறித்து பேசியதாவது:
விழுப்புரம் அடுத்த தளவானுார் தென்பெண்ணை ஆற்றில் அணைக்கட்டு உடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மழை, வெள்ள நீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது.
அரசிடம் கோரிக்கை வைத்தும் அணைக்கட்டு புதுப்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை புதுப்பித்து கட்ட வேண்டும். விழுப்புரம் - வளவனுார் பகுதி வரை செல்லும் ஆழங்கால் வாய்க்காலை துார் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லைக் கல் நட்டு பராமரிக்க வேண்டும். நீண்டகால இந்த கோரிக்கை செயல்படுத்தாமல் உள்ளது.
ஏரிகளில் மீன் குத்தகை எடுப்போர், அதில் ஆலை அழுக்குகளை கொட்டுவதால், நீர் கருப்பாகி கால்நடைகள் கூட குடிக்க முடியாமல் பாதித்து வருகிறது. ஆலை அழுக்கு கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏரிகளில் மீன் குத்தகை விடுவதையும் நிறுத்த வேண்டும்.
மாவட்டம் முழுதும் தரமான நெல் விதை கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். சிங்க் சல்பேட் போலி உரம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு சீல் வைக்கப்பட்ட உர நிறுவனங்கள் மீண்டும் புதிய பெயரில் செயல்படுவதை தடுக்க வேண்டும்.
விளை நிலங்களில் காட்டுப்பன்றி தாக்குதலைத் தடுக்க வேண்டும். விழுப்புரம் அருகே பிடாகம், நேமுர் உள்ளிட்ட பல இடங்களில் கால்நடை மருத்துவமனை செயல்படாமல் உள்ளது.
மருத்துவர்கள் நேரத்துக்கு வருவதில்லை. பணி நேரமும் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதே இல்லை. கால்நடைகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
மாட்டு கொட்டகை திட்டத்தில், சரியான விவசாயிகளுக்கு வழங்காமல் முறைகேடு நடக்கிறது. விதிகளை மீறி செங்கல் சூளைகள் அமைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.
ரெட்டணை கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் முறைகேட்டால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த கனமழை வெள்ளத்தால் நெல், உளுந்து, வேர்க்கடலை போன்ற பயிர்கள், ஈல்டு வராமல் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்.
பள்ளிநேலியனுார் ஓடை வாய்க்காலில் பாதை அமைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவாயிகளின் புகார் மற்றும் குறைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கையில், தளவானூர் அணைக்கட்டு புதுப்பிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏரி, குளம் சீரமைக்கப்படும், புதிதாக 500 குளம் வெட்டப்பட உள்ளது. வெள்ள பாதிப்பு கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.