ADDED : ஜூன் 12, 2025 06:27 AM

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து பேசுகையில்; மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், மாதத்தில் தலா ஒரு முகாம் வீதம் 12 மாதத்திற்கு, 156 முகாம் நடத்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என கூறினார்.
நேற்று நடந்த முகாமில் 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாம் துவக்க விழாவில், உதவி கலெக்டர் வெங்கடேஷ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பிரசன்னா, துணை இயக்குநர் செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.