/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர், டி.ஜி.பி.,யிடம் மனு
/
விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர், டி.ஜி.பி.,யிடம் மனு
விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர், டி.ஜி.பி.,யிடம் மனு
விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர், டி.ஜி.பி.,யிடம் மனு
ADDED : டிச 27, 2024 11:18 PM
விழுப்புரம், ; காவல் துறை சம்பந்த மான கோரிக்கைகள் மீது நட வடிக்கை கோரி, விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன், டி.ஜி.பி.,சங்கர் ஜிவாலிடம் மனு அளித்துள்ளார்.
விழுப்புரத்தை சேர்ந்த விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன், காவல் துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவாலை சந்தித்து மனு அளித்தார்.
அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து எஸ்.பி.,அலுவலகங்களிலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வடிவமைத்து வைக்க வேண்டும்.
எஸ்.பி.,க்கள் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நேர்மை யான முறையில் நடைமுறைபடுத்த வேண்டும்.
போதை பழக்கத்தை ஒழிக்க, தடுக்க கல்லுாரிகள், பள்ளிகளில் வாரம் இருமுறை போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி, பாதுகாப்பு செயலி, விழிப்புணர்வு ஏற்படுத்த பெண் போலீசார் மூலம் பயிற்சி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைளை தெரிவித்துள்ளார்.