/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்
/
விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்
ADDED : பிப் 04, 2024 04:36 AM

விழுப்புரம் : நடிகர் விஜய் கட்சி தொடங்கியதைத் தொடர்ந்து விழுப்புரத்தில், விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.
மாவட்ட தலைவர் மோகன் தலைமையில், துணைத் தலைவர் வடிவேல், நகர தலைவர் சுமன், விக்கி, பூபாலன், சீமான், சதீஷ் உள்ளிட்டோர், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், ஏழைகள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
முகையூர் ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் ரஷீத் தலைமை தாங்கினார். நடிகர் விஜய் பெயரில் அடுக்கம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் தண்டபானி, துணைச் செயலாளர் பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் அசோக், பிரபா, ரவி, வினோத், சந்தோஷ், ராஜேஷ் ரவி, ஜமால், கார்த்தி, ரங்கநாதன், இளவரசன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட பொருளாளர் காமராஜ், நிர்வாகிகள் சுமன், கார்த்திக், வைத்தி, விமல், மணிண்டன், மணிவண்ணன், ராஜலிங்கம், கோபி, அப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.