/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மேம்பாலம் பணி அடுத்த மாதம் துவக்கம் 'நகாய்' திட்ட இயக்குனர் தகவல்

ADDED : நவ 10, 2024 06:47 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் மேம்பாலம் பணி அடுத்த மாதம் துவங்குகிறது.
இதுகுறித்து நகாய் திட்ட இயக்குனர் வரதராஜன் கூறியதாவது:
விக்கிரவாண்டி வடக்கு பைாசில் அதிகரித்து வரும் விபத்துகளை தவிர்க்க முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி மற்றும் தென்பசியார் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க நகாய் முடிவு செய்து, கடந்தாண்டு மார்ச் மாதம் ரூ.60 .78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக மேம்பாலம் அமைக்கும் போது சாலைகளில் வாகனங்கள் இடையூறின்றி பயணிக்க சாலைகளின் இருபுறமும் சர்வீஸ் சாலையை 7.5 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சர்வீஸ் சாலையில் ஆங்காங்கே சிறு, குறு பாலம் அமைக்கும் பணி 85 சதவீதம் முடிவடைந்துள்ளது.
தென்பசியார் பகுதியில் சர்வீஸ் சாலை பணி முடிந்துள்ளது. இம்மாத இறுதியில் இப்பகுதியில் சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு மேம்பால பணி துவங்க உள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டியில் வரும் டிசம்பர் மாதத்தில் மேம்பாலம் பணி துவங்கும்.
முண்டியம்பாக்கத்தில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியில் மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை மின்வாரியம் மாற்றி அமைத்து தர வேண்டியுள்ளது. இப்பணி முடிந்ததும், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மேம்பாலம் பணி துவங்கும். இப்பணிகளை விரைந்து முடித்திட ஆய்வு செய்து ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.