/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிய பென்காக் சிலாட்டில் வெண்கலம் விக்கிரவாண்டி வீரர் சாதனை
/
ஆசிய பென்காக் சிலாட்டில் வெண்கலம் விக்கிரவாண்டி வீரர் சாதனை
ஆசிய பென்காக் சிலாட்டில் வெண்கலம் விக்கிரவாண்டி வீரர் சாதனை
ஆசிய பென்காக் சிலாட்டில் வெண்கலம் விக்கிரவாண்டி வீரர் சாதனை
ADDED : ஆக 09, 2025 07:32 AM

விக்கிரவாண்டி : ஆசிய பென்காக் சிலாட் போட்டியில், வெண்கலம் பதக்கம் வென்று விக்கிரவாண்டி வீரர், சாதனை படைத்துள்ளார்.
விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகனவேல்,19; சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில், 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் வியட்நாமில் சமீபத்தில் நடந்த, 9வது ஆசிய பென்காக் சிலாட் விளையாட்டு போட்டியில், 'சோலோ கிரியேட்டிவ்' பிரிவில் தமிழகம் சார்பில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில், 12 நாடுகளை சேர்ந்த, 600 வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழகம் சார்பில், 3 வீரர்கள் உட்பட,
இந்தியா சார்பில் 43 வீரர்கள் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வென்ற மோகனவேலை பயிற்சியாளர் மகேஷ் பாபு உள்ளிட்டோர் பாராட்டினர்.