விக்கிரவாண்டி பா.ம.க., வேட்பாளர் பள்ளிவாசலில் ஓட்டு சேகரிப்பு
விக்கிரவாண்டி பா.ம.க., வேட்பாளர் பள்ளிவாசலில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 18, 2026 04:19 PM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஜும்மா மசூதி பள்ளி வாசலில் முஸ்லிம்களிடம் பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் ஓட்டு சேகரித்தார்.
விக்கிரவாண்டியில் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்த சிவக்குமார் நேற்று, பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மை சமுதாயத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொகுதி பொறுப்பாளர் ஆலயமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், சுரேஷ், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், முகுந்தன், முருகன், ராஜா, சிறுபான்மைப் பிரிவு சர்புதீன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
