/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளியின் பாதுகாப்பை உறுதிபடுத்திய பின்னரே பள்ளியை திறக்கவேண்டும் விக்கிரவாண்டி பள்ளி பெற்றோர்கள் கோரிக்கை

ADDED : ஜன 07, 2025 06:28 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் சிறுமி இறந்த தனியார் பள்ளியில் பாதுகாப்பை உறுதி படுத்திய பிறகு திறக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டியில் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., படித்த சிறுமி லியாலட்சுமி,4: கடந்த 3ம் தேதி அன்று பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து இறந்தார்.
இச்சம்பவத்திற்கு பிறகு பள்ளி மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் இப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமிகளின் பெற்றோர்கள் பதட்டத்தில் உள்ளனர்.
பள்ளி மீண்டும் திறக்கப்படும் முன்பாக அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளியில் ஆய்வு செய்து பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்யத பின்னரே பள்ளியை திறக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.