/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2026 03:50 AM
விழுப்புரம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 3 மணிக்கு நிர்வாகிகள் 150 பேர், கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜம்புகாந்த் வரவேற்றார். மாநில செயலாளர் புஷ்பகாந்தன் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.
மாவட்ட பொருளாளர் பாரதிராஜா, துணை தலைவர் சீனுவாசன், இணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களின் டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில், கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

