நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கோலியனுார் அடுத்த சேர்ந்தனுார் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் சுதா பாபுஜி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பி.டி.ஓ.,க்கள் வேங்கடசுப்ரமணியன், முல்லை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லட்சுமணன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று பேசினார். தொடர்ந்து, துப்புரவு பணியாளர்களை கவுரவித்தார்.
கூட்டத்தில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகவேல், ஊராட்சி துணைத் தலைவர் மஞ்சுளா, ஒன்றிய துணைச் செயலாளர் பாலாஜி, கிளை நிர்வாகிகள் அரிதாஸ், புகழேந்தி, ராமசாமி, உதயசூரியன், ராமதாஸ், கண்ணன், வீரப்பன், குபேந்திரன், முருகன், ரவி, பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.