/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
/
வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 18, 2024 06:07 AM

வானுார் : வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி, எறையானுார், எடையான்குளம் கிராம மக்கள் புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த எறையானுார், எடையான்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணியளவில், ஊராட்சி தலைவர் கெஜலட்சுமி ரமேஷ் தலைமையில் வெள்ள நிவாரணம் கேட்டு புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கிளியனுார் போலீசார் மற்றும் திண்டிவனம் தாசில்தார் சிவா ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அனைத்து பகுதிகளிலும் நிவாரணம் வழங்கப்படுகிறது. எங்களுக்கு மட்டும் வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன் எனக்கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அப்போது தாசில்தார், பாதிப்பு இருந்தால் கணக்கெடுப்பு நடத்தி விரைவில் நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தார். இதையேற்று 10:50 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.