/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெளியூர் நபர்களுக்கு மனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு: செஞ்சி தாலுகா அலுவலகம் முற்றுகை

ADDED : டிச 21, 2025 06:15 AM

செஞ்சி: வல்லம் ஊராட்சியில் வெளியூர் நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
செஞ்சி அடுத்து வல்லம் ஊராட்சியில் கடந்த 1998ம் ஆண்டு 1.20 ஏக்கர் புறம்போக்கு இடத்தில் 91 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியுள்ளனர். இதே இடத்தில் சுமார் 2 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தில் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செஞ்சி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின், தாசில்தார் துரை செல்வத்திடம் கொடுத்துள்ள மனுவில், 'தற்போது குடியிருக்கும் பகுதிக்கு சென்று வர வழி இல்லாமல் அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதை அகற்றி தர வேண்டும். காலியாக உள்ள இடம் எதிர்காலத்தில் விளையாட்டு மைதானம், அரசு பள்ளி கட்டடம், குடிநீர் டேங்க் கட்டுவதற்கு தேவை உள்ளது.
அத்துடன் உள்ளூரைச் சேர்ந்த விதவை, மாற்றுத் திறனாளி மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இலவச வீட்டு மனை கேட்டு கொடுத்துள்ள மனுக்கள் நிலுவையில் இருப்பதால், வெளியூர் நபர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.