ADDED : ஜன 30, 2026 06:32 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்றக்கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அ.தி.மு.க., கிளைச் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். பா.ஜ., பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பெரியசாமி, காங்., பகுதி செயலாளர் அயினு, பழனிவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், விவசாய பிரிவு ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி உறுப்பினர் சதீஷ் வரவேற்றார். விவசாய சங்க பிரதிநிதி அய்யனார், கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் தெற்கு பொன்னங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி வலியுறுத்தினர். தொடர்ந்து தலைமையிடத்து துணை தாசில்தார் சித்தார்த்தனிடம் மனு அளித்தனர்.

