/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில்
/
ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில்
ADDED : ஆக 02, 2011 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : துவக்க நிலை ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.திருக்கோவிலூர் வட்டார வள மையத்தில் 2 கட்டங்களாக நடந்த முகாமில், பேச்சு திறனை மேம்படுத்தும் பயிற்சி நடந்தது.
திறன் ஆர்வமூட்டும் செயல்பாடுகள், இலக்கணம், ஆங்கிலத்தில் எழுதும் திறனை மேம்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.ஆசிரியர் பயிற்றுநர்கள் ரஞ்சனிதேவி, கணபதி பயிற்சி அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சிவசுப்ரமணியன் செய்திருந்தார்.