/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் பெண்ணாடம், அரியலுாரில் நிற்கும்
/
விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் பெண்ணாடம், அரியலுாரில் நிற்கும்
விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் பெண்ணாடம், அரியலுாரில் நிற்கும்
விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் பெண்ணாடம், அரியலுாரில் நிற்கும்
ADDED : மே 29, 2025 03:26 AM
விழுப்புரம்: விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு அதிவிரைவு ரயில், பெண்ணாடம் மற்றும் அரியலுார் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு அதிவிரைவு ரயில் கடந்த 2ம் தேதி முதல் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.
வார நாட்களில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இந்த சிறப்பு ரயில் வரும் ஜூன் 30ம் தேதி வரை இயக்கப்படுகிறது. பெண்ணாடம், அரியலுார் ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்கிறது.
விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண் 06105), காலை 1.40க்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் செல்கிறது. எதிர் வழித்தடத்தில் அதே நாளில் மதியம் 2:35 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ராமேஸ்வரம் - விழுப்புரம் ரயில் (வ.எண் 06106) இரவு 10:35க்கு விழுப்புரம் வந்தடைகிறது.
இந்த ரயில்கள் விருத்தாசலம், பெண்ணாடம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. புதிய ரயில் நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்ட பெண்ணாடத்திற்கு காலை 5:05 மணிக்கு வரும் விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு அதிவிரைவு ரயில் காலை 5:06 மணிக்குப் புறப்படுகிறது. அதே போல், காலை 5:25க்கு அரியலூர் சென்று 5:26க்கு புறப்படுகிறது. எதிர் வழித்தடத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:35 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8:40 மணிக்கு அரியலுார் வருகிறது. அங்கிருந்து இரவு 8.45 புறப்பட்டு, 9.10க்கு பெண்ணாடம் அடைகிறது.
அங்கிருந்து இரவு 9:11க்கு புறப்பட்டு இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. ரயில்களுக்கான முன்பதிவை ரயில் நிலையங்களிலும், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாகவும் மேற்கொள்ளலாம்.