/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், கல்லை மாவட்டங்களில் தீபாவளிக்கு ரூ.16.35 கோடிக்கு மது விற்பனை
/
விழுப்புரம், கல்லை மாவட்டங்களில் தீபாவளிக்கு ரூ.16.35 கோடிக்கு மது விற்பனை
விழுப்புரம், கல்லை மாவட்டங்களில் தீபாவளிக்கு ரூ.16.35 கோடிக்கு மது விற்பனை
விழுப்புரம், கல்லை மாவட்டங்களில் தீபாவளிக்கு ரூ.16.35 கோடிக்கு மது விற்பனை
ADDED : நவ 01, 2024 11:33 PM
விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இந்தாண்டு தீபாவளிக்கு இரு தினங்களில் மட்டும் 16.35 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 195 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 109, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினசரி சராசரியாக 3.50 கோடி முதல் 4.50 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்து வருகிறது. விழாக்காலங்களில் விற்பனை இருமடங்காக அதிகரிப்பது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகை தினத்தில் இரு மடங்கு மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதி 7.50 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
மறுநாள் 31ம் தேதி தீபாவளி தினத்தில் 8.85 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்தாண்டை விட 50 லட்சம் ரூபாய் அளவில் கூடுதலாக விற்பனை நடந்துள்ளது.
இந்தாண்டு, அதிகளவில் குறிப்பாக பீர் வகைகள் விற்பனையாகியுள்ளதாக, டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆண்டு தோறும் தீபாவளி நாளில் மது விற்பனை அதிகரித்து, தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருவதால், இந்தாண்டு மது விற்பனை புள்ளி விபரங்களை தெரிவிக்கக் கூடாது என டாஸ்மாக் மேலிட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், முழுமையான புள்ளி விபரங்களைக் கொடுக்க முடியாதென கூறி, அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தயக்கத்துடன், தோராயமாக விற்பனை நிலவரங்களை குறைத்து கூறியுள்ளனர்.