/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் புத்தக திருவிழா; பிப்.13ம் தேதி வரை நீட்டிப்பு
/
விழுப்புரம் புத்தக திருவிழா; பிப்.13ம் தேதி வரை நீட்டிப்பு
விழுப்புரம் புத்தக திருவிழா; பிப்.13ம் தேதி வரை நீட்டிப்பு
விழுப்புரம் புத்தக திருவிழா; பிப்.13ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : பிப் 11, 2024 11:00 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மாணவர்கள் மற்றும் புத்தகம் வாசிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தக திருவிழா பிப்.13ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.விழுப்பும் கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா, புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் பிப்.2ம் தேதி தொடங்கி, தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.
இந்த புத்தகத்திருவிழாவில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், புத்தக வாசிப்பாளர்கள் வருகை புரிந்து, தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இந்த புத்தகத் திருவிழா நேற்றுடன் (பிப்.11) நிறைவடைய இருந்தது. இந்த நிலையில், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், புத்தகம் வாசிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, புத்தகத் திருவிழா மேலும் பிப்.12, 13ம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் நீட்டிப்பு செய்து நடைபெறவுள்ளதாக, கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.