/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பஸ் நிலையத்தில் மாணவர்கள் மோதலால் பரபரப்பு
/
விழுப்புரம் பஸ் நிலையத்தில் மாணவர்கள் மோதலால் பரபரப்பு
விழுப்புரம் பஸ் நிலையத்தில் மாணவர்கள் மோதலால் பரபரப்பு
விழுப்புரம் பஸ் நிலையத்தில் மாணவர்கள் மோதலால் பரபரப்பு
ADDED : ஜன 25, 2024 06:36 AM
விழுப்புரம் : விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரின் மண்டை உடைந்தது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று மாலை 5:00 மணிக்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் தங்கள் ஊர் பஸ்களுக்காக காத்திருந்தனர். அப்போது, விழுப்புரம் நகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் சிலருக்கும், விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
அதில், நன்னாடை சேர்ந்த பிளஸ் 2 மாணவரின் மண்டை உடைந்தது. சேர்ந்தனுாரை சேர்ந்த கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்தார். இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், பஸ்சிற்காக காத்திருந்த நகராட்சி பள்ளி மாணவர்கள், அங்கு நின்றிருந்த கல்லுாரி மாணவரிடம் நன்னாடு பஸ் எப்போது வரும் என்று கேட்டதற்கு, உங்களுக்கு பஸ் தகவல் சொல்லதான் இங்கு நிற்கிறேனா என கேட்டு திட்டினார்.
அதில் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்த கல்லுாரி மாணவர் தாக்கியதில் பள்ளி மாணவரின் மண்டை உடைந்துள்ளது.
உடன் அங்கிருந்த மாணவர்கள் உறவினர்களுக்கு தகவல் சொல்லி, விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவில் இருந்து வந்த 3 வாலிபர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில் கல்லுாரி மாணவர்கள் மயங்கி விழுந்தது தெரிய வந்தது.
மோதலில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களை, சப் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் தேடிவருகின்றனர்.
பஸ் நிலையத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.