/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
/
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
ADDED : ஜூன் 14, 2025 01:18 AM

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், நகர, பேரூர், ஒன்றிய கட்சி அலுவலகங்கள் திறப்பு விழா மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன்எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை;
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், இன்று 14ம் தேதி, கிளியனூர் மேற்கு ஒன்றியம், கிளியனுார் கிழக்கு ஒன்றியம், வானுார் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு ஒன்றியங்களில் புதிய தி.மு.க., அலுவலகம் திறப்பு விழாவும், அதனை தொடர்ந்து அந்தந்த பகுதியில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டமும் நடக்கிறது.
இதேபோல், நாளை 15ம் தேதி காணை கிழக்கு ஒன்றியம், கோலியனுார் மத்திய மற்றும் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் மேற்கு, கிழக்கு நகரங்களில் புதிய கட்சி அலுவலக திறப்பு விழாவும், செயல்வீரர்கள் கூட்டங்களும் நடக்கிறது.
16ம் தேதி கண்டமங்கலம் வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஒன்றியம், வளவனுார் பேரூராட்சி, கோலியனுார் கிழக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தி.மு.க., அலுவலகங்கள் திறப்பு விழாவும், அதனை தொடர்ந்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டமும் நடக்கிறது.
இக்கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள், மாவட்ட நகர, ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.