/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : மே 07, 2025 01:34 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசியதாவது;
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். ஏழை மக்களுக்கு தாயுள்ளத்தோடும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் போராளியாகவும், பன்முகத்தன்மை கொண்டவராக செயல்படுகிறார். மத்திய மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் வெற்றி பெற ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து 2வது முறையாக முதல்வராக ஸ்டாலின் அமருவார். தேர்தலில் வெற்றி பெற வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை கூற வேண்டும். வானுார் தொகுதியில் 2 முறை அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை தி.மு.க., வெற்றி பெற்று வானுார் தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மத்திய மாவட்ட ஒன்றிய நகர, பேரூராட்சிகளில், தி.மு.க., ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது. ஜூன் 1ம் தேதி மதுரையில் நடக்கும் பொதுக்குழுவில் மத்திய மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வழக்கறிஞர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், பிரபாகரன், வளவனுார் நகர செயலாளர் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.