/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அகில இந்திய கராத்தே போட்டிக்கு விழுப்புரம் கல்லூரி மாணவர் தேர்வு
/
அகில இந்திய கராத்தே போட்டிக்கு விழுப்புரம் கல்லூரி மாணவர் தேர்வு
அகில இந்திய கராத்தே போட்டிக்கு விழுப்புரம் கல்லூரி மாணவர் தேர்வு
அகில இந்திய கராத்தே போட்டிக்கு விழுப்புரம் கல்லூரி மாணவர் தேர்வு
ADDED : டிச 19, 2024 06:47 AM

விழுப்புரம்: விழுப்புரம் கல்லூரி மாணவர், ஹரியானாவில் நடக்க உள்ள அகில இந்திய தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த டிச.3ம் தேதி தொடங்கி 7ம் தேதி மாநிலங்கள் அளவில் பல்கலைக் கழகத்திற்கிடையேயான கராத்தே போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு மாநில கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, விழுப்புரம் அடுத்த அய்யூர்அகரம் கிராமத்தைச் சேர்ந்த, விழுப்புரம் எய்ம்ஸ் கராத்தே மற்றும் யோகா மையத்தில் பயிற்சி பெற்று வரும் பொறியியல் கல்லூரி மாணவர் தீபன்ராஜ்,22; கலந்துகொண்டு, கராத்தே போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றார். இதே போல், மற்றொரு விழுப்புரம் மாணவர் தாஸ், 22; வெள்ளி பதக்கம் வென்றார்.
இதனையடுத்து, வரும் ஜனவரி 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை, ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக் கழகத்திற்கான தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க மாணவர் தீபன்ராஜ் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தேசிய அளவில் கராத்தே போட்டியில் பதக்கம் வென்று வந்த மாணவர்கள் தீபன்ராஜ், தாஸ், விழுப்புரம் மாவட்ட தலைமை கராத்தே பயிற்சியாளர் ரகுராமன் பாராட்டு தெரிவித்தார்.

