/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டெண்டர் விட்டும் எல்.இ.டி., தெரு விளக்குகள் வரவில்லை விழுப்புரத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
/
டெண்டர் விட்டும் எல்.இ.டி., தெரு விளக்குகள் வரவில்லை விழுப்புரத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
டெண்டர் விட்டும் எல்.இ.டி., தெரு விளக்குகள் வரவில்லை விழுப்புரத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
டெண்டர் விட்டும் எல்.இ.டி., தெரு விளக்குகள் வரவில்லை விழுப்புரத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
ADDED : ஜன 30, 2024 06:29 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் எல்.இ.டி., தெரு மின் விளக்குகள் பொருத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் டெண்டர் விட்டும் இன்னும் விளக்குகள் பொருத்தப்படாதது பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நிதி நெருக்கடி கார ணமாக, பல்வேறு திட்டப் பணிகள் தாமதமாகி வந்த நிலையில், தற்போது முக்கிய பிரச்னையாக, விரிவாக்கப்பட்ட 6 வார்டுகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிக்கப்படாமல், நீண்ட காலமாக இழுபறியில் உள்ளது.
இந்நிலையில் அடுத்த முக்கிய பிரச்னையாக 42 வார்டுகளில் தெரு மின் விளக்குகள் மாற்றுவதற்கு வழியின்றி சிக்கல் நீடித்து வருகிறது.
பழைய தெரு விளக்குகளை அகற்றிவிட்டு, புதிய எல்.இ.டி., மின் விளக்குகள் மாற்ற, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது
ஆனால், எல்.இ.டி., விளக்குகள் மாற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தெரு மின்விளக்கு பிரச்னையை, ஒவ்வொரு நகர மன்ற கூட்டத்திலும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே விமர்சனமாக முன்வைத்து வருகின்றனர்.
கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கவுன்சிலர்கள் தெரு மின் விளக்குகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
தெரு மின்விளக்குகளை சீரமைக்கும் பணியில் உள்ள நகராட்சி ஊழியர்களும் பணிக்கு வராததால், பழைய மின் விளக்குகளையும் பராமரிக்க முடியவில்லை.
புதிய மின் விளக்குகளும் மாற்றப்படாமல் பெரும் பகுதி தெருக்கள் இருளில் மூழ்கி கிடப்பதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து, நகராட்சி சேர்மன், கமிஷனர் மற்றும் கவுன்சிலர்களுக்கான 'வாட்ஸ் ஆப்' குழுவிலும் நேற்று காங்., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர், தங்களது வார்டு பகுதிகளில் தெரு மின் விளக்கு மாற்றாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது.
எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
5 கோடி ரூபாய் மதிப்பில் தெருமின் விளக்கு களுக்கு டெண்டர் எடுத்தவர்கள், எல்.இ.டி., மின் விளக்கை மாற்றவில்லை.
வார்டுக்கு 20 எல்.இ.டி., மின் விளக்குகள் பரிசோதனைக்காக வழங்கினர். அந்த மின்விளக்குகளும் பல இடங்களில் எரியாமல் உள்ளன.
இதனால், பொதுமக்க ளுக்கு பதில் கூற முடியவில்லை என கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.