/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விரோதத்தில் நண்பர் வெட்டி கொலை விழுப்புரம் கோர்ட்டில் 2 பேருக்கு ஆயுள்
/
விரோதத்தில் நண்பர் வெட்டி கொலை விழுப்புரம் கோர்ட்டில் 2 பேருக்கு ஆயுள்
விரோதத்தில் நண்பர் வெட்டி கொலை விழுப்புரம் கோர்ட்டில் 2 பேருக்கு ஆயுள்
விரோதத்தில் நண்பர் வெட்டி கொலை விழுப்புரம் கோர்ட்டில் 2 பேருக்கு ஆயுள்
ADDED : ஜூலை 18, 2025 05:12 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காதல் முன் விரோதத்தில் நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, அண்ணா நகரை சேர்ந்த நடராஜன் மகன் சங்கர், 36; குறிஞ்சிப்பாடி அடுத்த ராசாகுப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தியாகு, 40; ரவுடியான இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சங்கரின் தங்கையை தியாகு காதலித்துள்ளார். இதற்கு, சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டு பிரிந்தனர்.
ஆனாலும், சங்கரை கொலை செய்ய தியாக திட்டமிட்டார்.
இந்நிலையில், கடந்த, 2023ம் ஆண்டு ஜனவரியில், தியாகு, அவரது நண்பரான வடலுார் காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்த சடயன் மகன் சரவணன், 36; ஆகியோர், பைக்கில் குறிஞ்சிப்பாடியில் உறவினர் சுப நிகழ்ச்சிக்கு சென்றனர்.
அப்போது, சங்கரையும் சமாதானம் பேசி அழைத்து சென்றனர். அன்று இரவு, காடாம்புலியூர் பகுதிக்கு சென்று, மூவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், அங்கிருந்து, விழுப்புரம் அருகே பில்லுார் அடுத்த ராமநாதபுரத்தில் உள்ள தியாகுவின் அக்கா வீட்டிற்கு, பைக்கில் புறப்பட்டனர்.  நள்ளிரவில், ராமநாதபுரம் மலட்டாறு பகுதியில் மூவரும் மீண்டும் மது அருந்தினர்.
அப்போது, போதை தலைக்கேறிய சங்கரை,  தியாகு, சரவணன் இருவரும் வெட்டி கொலை செய்துவிட்டு, உடலை பைக்கில் எடுத்து வந்து, வளவனுார் அருகே ஆண்டிப்பாளையம் என்ற இடத்தில் சாலையோரம் போட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, தியாகு, சரவணன் மீது கொலை வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி மணிமொழி, குற்றவாளியான தியாகு, சரவணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, இருவரும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

