/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நண்பரை கொலை செய்த லாரி டிரைவருக்கு ஆயுள்; விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு

ADDED : நவ 23, 2024 06:54 AM
விழுப்புரம் : வானுார் அருகே நண்பரை அடித்து கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
துாத்துக்குடி மாவட்டம், கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி, 50; விருதுநகர் மாவட்டம், கள்ளமாணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி, 53; நண்பர்கள். இருவரும் லாரி டிரைவர்கள்.
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பட்டானுார் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மாரிசாமிக்கு கொடுத்த கடனை, குருசாமி கேட்டார்.
அதற்கு பணம் இல்லை என மாரிசாமி கூறியதால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குருசாமி, மாரிசாமியை ஜாதி பெயரைக்கூறி திட்டி இரும்பு ராடால் தாக்கினார். அதில் அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குருசாமியை கைது செய்த ஆரோவில் போலீசார், அவர் மீது விழுப்புரம் சிறப்பு கோர்ட்டில் கொலை வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யஜோதி, குற்றம் சாற்றப்பட்ட குருசாமிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதனைத் தொடர்ந்து குருசாமி கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.