/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி :2025க்கான கிரிக்கெட் போட்டி
/
விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி :2025க்கான கிரிக்கெட் போட்டி
விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி :2025க்கான கிரிக்கெட் போட்டி
விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி :2025க்கான கிரிக்கெட் போட்டி
ADDED : ஜன 02, 2026 04:37 AM

விழுப்புரம்: விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி சார்பில், 2025ம் ஆண்டுக்கான அகாடமிகள் அளவிலான, 14,16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.
விழுப்புரம் வி.ஆர்.எஸ்., கல்லுாரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், விருதாச்சலம், கடலுார், கள்ளக்குறிச்சி, சேலம், திருக்கோவிலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 16 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் புதுச்சேரி ஜெகத் அகாடமியும், விழுப்புரம் அகாடமியும் விளையாடினர். அதில், ஜெகத் முதலிடம் பிடித்தது. விழுப்புரம் அணி இரண்டாமிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, விழுப்புரத்தில் பரிசு கோப்பை வழங்கினர்.
விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., தினகரன் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார். விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர் முரளி, அகாடமி நிர்வாகி முத்துக்குமார், பெற்றோர்கள், வீரர்கள் பங்கேற்றனர். தொடர் நாயகன் விருதை விழுப்புரம் அகாடமி அணி வீரர் நவீன் பெற்றார். அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது .

