/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க., செயலாளர் நீக்கம்
/
விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க., செயலாளர் நீக்கம்
ADDED : ஜன 29, 2026 07:07 AM

திண்டிவனம்: அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன், அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தது, இது, அக்கட்சி நிர்வாகிகள் சிலருக்கு பிடிக்கவில்லை என, தெரிகிறது.
இந்நிலையில், கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா, கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். இதேபோல், அ.ம.மு.க.,விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக கடந்த 8 ஆண்டுளாக பதவியில் இருந்த திண்டிவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் முத்து. த.வெ.க.,.வில், இணைய பேசியுள்ளார் .
இதுபற்றி, அ.ம.மு.க.,கட்சி தலைமைக்கு தெரியவந்ததையடுத்து, முத்துவை கட்சியில் இருந்து அ.ம.மு.க.,பொதுச் செயலாளர் நீக்கியுள் ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.ம.மு.க.,செயலாளர் முத்துவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக' தெரிவித்துள்ளார்.

