/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்வியில் முன்னேறும் விழுப்புரம் மாவட்டம்
/
கல்வியில் முன்னேறும் விழுப்புரம் மாவட்டம்
ADDED : அக் 01, 2025 01:09 AM
கல்வியில் பின் தங்கியிருந்த விழுப்புரம் மாவட்டம், தற்போது தமிழக அரசின் தீவிர முயற்சிகள் மற்றும் கல்வித் துறையின் தொடர் ஊக்க நடவடிக்கைகள் காரணமாக,10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தேர்ச்சி சதவீதத்தை 95 சதவீதம் வரை உயர்த்தி, மாநில அளவில் சாதனை படைத்து வருகிறது.
கடந்த 202-23ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 12,451 மாணவர்களும், 12,232 மாணவிகள் என 24,663 பேர் தேர்வு எழுதினர். இதில், 10,886 மாணவர்களும், 11,470 மாணவிகள் என 22,356 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 90.57 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 24 வது இடத்திற்கு முன்னேறினர்.
2023-24ம் ஆண்டு 12,414 மாணவர்கள், 11679 மாணவிகள் என 24,093 பேர் தேர்வு எழுதினர். இதில், 11,456 மாணவர்கள், 11,217 மாணவிகள் என 22,673 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதன் மூலம் 94.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10ம் இடத்திற்கு முன்னேறியது.
2024-25ம் ஆண்டு தேர்வில் 12,104 மாணவர்கள், 11,612 மாணவிகள் என 23,716 பேர் தேர்வு எழுதினர். இதில், 11,394 மாணவர்கள், 11,156 மாணவிகள் என 22,552 பேர் தேர்ச்சி பெற்று, 95 சதவீதமாக 15வது இடத்திற்கு முன்னேறினர்.
அதே போன்று பிளஸ் 1 தேர்வில் கடந்த 2022-23ம் ஆண்டு 10,389 மாணவர்கள், 11,184 மாணவிகள் என 21,573 பேர் தேர்வு எழுதினர். இதில், 8,157 மாணவர்கள், 10,075 மாணவிகள் என 18,232 பேர் தேர்ச்சி பெற்று, 84.51 சதவீதம் தேர்ச்சியடைந்து 36வது இடத்திற்கு முன்னேறினர்.
2023-24ம் கல்வியாண்டில் 10,735 மாணவர்கள், 11,220 மாணவிகள் என 21,964 பேர் தேர்வு எழுதினர். அதில் 9,138 மாணவர்கள், 10,500 மாணவிகள் என மொத்தம் 19,638 பேர் தேர்ச்சி பெற்று, 89.41 சதவீதம் தேர்ச்சி பெற்று 26வது இடத்துக்கு முன்னேறினர்.
2024-25ம் ஆண்டில் 11,120 மாணவர்கள், 11,025 மாணவிகள் என 22,145 பேர் தேர்வு எழுதினர். அதில், 9928 மாணவர்கள், 10,353 மாணவிகள் என 20,281பேர் தேர்ச்சி பெற்று, 91.56 சதவீதம் தேர்ச்சி கொடுத்து, 23வது இடத்திற்கு முன்னேறினர்.
பிளஸ் 2 தேர்வில், கடந்த 2022-23ம் ஆண்டில் 10,762 மாணவர்கள், 10,804 மாணவிகள் என 21,566 பேர் தேர்வு எழுதினர். அதில் 9366 மாணவர்கள், 10,186 மாணவிகள் என 19,552 பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 33வது இடத்துக்கு முன்னேறினர். 90.66 சதவீதம் ஆக தேர்ச்சி உயர்ந்தது.
2023-24ம் ஆண்டில் 10,201 மாணவர்கள், 11012 மாணவிகள் என 21,213 பேர் தேர்வு எழுதினர். அதில் 9224 மாணவர்கள், 10,540 மாணவிகள் என 19,764 பேர் தேர்ச்சி பெற்று 93.17 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். 27வது இடத்திற்கு முன்னேறியது.
2024-25ம் ஆண்டில் 10,533 மாணவர்கள், 11048 மாணவிகள் என 21,581 பேர் தேர்வு எழுதினர். அதில், 9851 மாணவர்கள், 10,675 மாணவிகள் என 20,526 பேர் தேர்ச்சி பெற்று, 95.11 சதவீதம் பெற்று, 18வது இடத்துக்கு முன்னேறினர்.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் வழிகாட்டுதலில், முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தலைமையில், கல்வித்துறை அதிகாரிகள் தொடர் ஆலோசனைகள் வழங்கியும், மாதிரி தேர்வுகள் நடத்தியும், ஆசிரியர்களின் கூட்டு முயற்சியோடு மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் சாதித்து வருகின்றனர்.