/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளவனூர் குமாரபுரி கோவிலில் தீமிதி விழா
/
வளவனூர் குமாரபுரி கோவிலில் தீமிதி விழா
ADDED : ஜூலை 25, 2011 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனூர் திரவுபதியம்மன் கோவிலில் திருத்தேர் தீமிதி விழா நடந்தது.
வளவனூர் குமாரபுரி திரவுபதியம்மன், கிருஷ்ணசாமி கோவிலில் கடந்த மாதம் 30ம் தேதி திரவுபதியம்மனுக்கு துவஜாரோகணம் துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 14ம் தேதி முதல் அம்மன் இந்திர விமானம், சிம்ம வாகனம், பின்னக்கிளை, நாகவாகனம், கருடசேவா , அனுமந்த வாகனம், அம்மன் திருக்கல்யாணம், யானை வாகனம் மற்றும் வெட்டுக்கிளி வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 9ம் நாள் உற்சவத்தில் திருத்தேர் தீமிதி திருவிழா நடந்தது. கடந்த 23ம் தேதி நடந்த 10ம் நாள் உற்சவத்தில் மஞ்சள் நீர் மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது.