/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நத்தமேடு கிராமத்தில் அரசு நிவாரண நிதி
/
நத்தமேடு கிராமத்தில் அரசு நிவாரண நிதி
ADDED : ஜூலை 27, 2011 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : நத்தமேடு கிராமத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்கப்
பட்டது.திண்டிவனம் அடுத்த நத்தமேடு கிராமத்தில் கடந்த 25ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் காவேரி, சடையாண்டி, முருகன் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன.
இவர்களது குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவியாக தலா 5,000 ரூபாய், இலவச வேட்டி-சேலை, மண்ணெண்ணெய், 5 கிலோ அரிசி ஆகியவற்றை டாக்டர் அரிதாஸ் எம்.எல்.ஏ., வழங்கினார். தாசில்தார் தலைமலை, துணை தாசில்தார் வேணு, வருவாய் ஆய்வாளர் அனந்தசயனம், வி.ஏ.ஓ., வெங்கடேசன் உடனிருந்தனர்.