/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்ட்ராக்ட் கிளப் பதவி ஏற்பு விழா
/
இன்ட்ராக்ட் கிளப் பதவி ஏற்பு விழா
ADDED : ஜூலை 27, 2011 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.விழாவிற்கு ரோட்டரி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன் , முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், ராஜேந்திரன், சவுந்தர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். இன்ட்ராக்ட் தலைவராக அஜீத்குமார், செயலாளராக சதீஷ், பொருளாளராக திருப்பதி ராஜா ஆகியோருக்கு ரோட்டரி துணை ஆளுநர் முத்துசாமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நாராயணன், குசேலன், பாபு, ராஜப்பா, சக்கரவர்த்தி, வைத்திலிங்கம், சிவா கலந்து கொண்டனர். ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.