ADDED : ஆக 01, 2011 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு பி.டி.ஓ., சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.
பி. டி.ஓ., உஷாராணி முகாமை துவக்கி வைத்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தர்மலிங்கம், கண்ணன், சம்மந்தம், திருவேங்கடம், தலைமையிட ஊர்நல அலுவலர் ரவிக்குமார் கலந்து கொண்டனர். பின்தங்கிய மண்டலங்களுக்கான மான்ய நிதி திட்டத்தின் கீழ் அடிப்படை ஆதாரம் குறித்து மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவன பயிற்சியாளர்கள் குணா, நதியா, செந்தில் முருகன் பயிற்சி அளித்தனர்.