நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மளிகை கடையில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டு காத்தவராயன் மகன் ராமலிங்கம்,43.
மளிகை கடை வைத்துள்ளார். தனது சகோதரர்கள் தனுசு, பழனி ஆகியோருடன் இவருக்கு நிலப் பிரச்னை உள்ளது. கடந்த 28ம் தேதி தனுசு, பழனி மற்றும் ஆதரவாளர்கள் சேர்ந்து ராமலிங்கத்தின் மளிகை கடையில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர்.இது குறித்த புகாரின் பேரில் தனுசு, பழனி உட்பட 8 பேர் மீது கண்டமங்லகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.