/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முருக்கம்பாடியில் தாய்ப்பால் வார விழா
/
முருக்கம்பாடியில் தாய்ப்பால் வார விழா
ADDED : ஆக 06, 2011 02:25 AM
திருக்கோவிலூர் : முருக்கம்பாடியில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.மணலூர்பேட்டை லயன்ஸ் சங்கம், முகையூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகமும் இணைந்து முருக்கம்பாடியில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப் பட்டது.ஊராட்சி தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
மணலூர்பேட்டை அரிமா சங்க தலைவர் சையத்அலி, அரிவையர் சங்க தலைவி சாந்தி முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர் அலமேலு வரவேற்றார்.
முகையூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷீலா, தாய்ப் பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.மேற்பார்வையாளர் பாத்திமா அமலோர்பவராணி, அரிமா நிர்வாகிகள் குழந்தைவேலு, தேன்மொழி, குணசுந்தரி மற்றும் குணலட்சுமி பங்கேற்றனர்.