/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை : பொதுமக்கள் அவதி
/
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை : பொதுமக்கள் அவதி
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை : பொதுமக்கள் அவதி
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை : பொதுமக்கள் அவதி
ADDED : ஆக 26, 2011 12:21 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்கி வருகின்றனர்.
சங்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த போது 4 டாக்டர்கள் பணி புரிந்தனர். அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், தற்போது ஒரு பெண் டாக்டர் உட்பட இரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் பொது மக்கள், நோயாளிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. சங்கராபுரம் மற்றும் சுற்றுப்புற 50 கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது இங்கு பணிபுரியும் ஒரு ட õக்டர் பகல் நேரத்திலும், ஒரு டாக்டர் மாலையிலும் 'ஷிப்டு' முறையில் பணி செய்கின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறை புதிதாக கட்டப்பட்டும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் சங்கராபுரம் பகுதியில் சந்தேக மரண வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நேர விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டப்பட்டு டாக்டர்கள் இல்லாததால் பூட்டியே கிடக்கிறது. அரசு மருத்துவமனையில் பாம்புகடி மருந்து ஸ்டாக் இல்லை. சங்கராபுரம் பகுதியில் பாம்பு கடியால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். பாம்பு கடிபட்டவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை நீடிக்கிறது. இந்த மருத்துவமனை நுழைவு வாயிலில் சாக்கடை நீர் தேங்கி கிடக் கிறது. மருத்துவமனை வளாகத்தில் புதர்கள் மண்டிக் கிடப்பதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் பாம்புகள் மருத்துவமனை வளாகத்தில் அடிக்கடி வருவதாக உள் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்களை நியமிக்க கோரி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்களை நியமித்து, மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை அரங்கம் செயல்படவும், மருத்துவமனையில் பாம்புகடி மருந்து ஸ்டாக் வைக்கவும், பிரேத பரிசோதனை செய்யவும் சுகாதாரத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.