/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஐக்கிய ஜமாஅத் பேரவை சிறப்பு இப்தார் நிகழ்ச்சி
/
ஐக்கிய ஜமாஅத் பேரவை சிறப்பு இப்தார் நிகழ்ச்சி
ADDED : ஆக 28, 2011 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தலைவர் அமீர்அப்பாஸ் தலைமை தாங்கினார். நகரத்தலைவர் ஜாகீர் உசேன், அப்துல்கனி, நூர்தீன், அபுதாகீர், இளைஞரணி செயலாளர் அத்துல் ஹக்கீம், முகமது மாலிக், சாகுல் அமீது, அப்துல்ஹாதி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை சேவையை மேம்படுத்த புதிய இயக்குனர்கள் நியமிப்பது, முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கத்திற்கு அரசின் நிதியுதவி பெற்று மகளிருக்கு உதவி செய்வது. இந்த ஆண்டு அவரவர் பள்ளி வாசல்களிலேயே தொழுகை நடத்துவது. 500 முஸ்லிம் ஏழைகளுக்கு பித்ரா வழங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.