/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாஸ்மாக் கடை சரக்கில் தண்ணீர் கலந்தவர் கைது
/
டாஸ்மாக் கடை சரக்கில் தண்ணீர் கலந்தவர் கைது
ADDED : செப் 01, 2011 01:27 AM
செஞ்சி : டாஸ்மாக் சரக்கில் தண்ணீர் கலந்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
டாஸ்மாக் விழுப்புரம் கோட்ட மேலாளர் கிருஷ்பு நேற்று முன்தினம் செஞ்சியில், தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது காலி பிராந்தி, விஸ்கி பாட்டில்கள், காலி மேல் மூடிகள் மற்றும் பிராந்தி பாட்டில்களை திறக்க பயன்படும் ஊசி ஆகியன இருந்தது. விசாரணையில் அரசு சீல் வைத்துள்ள பாட்டில்களை ஊசியின் மூலம் லாவகமாக திறந்துள்ளது தெரிந்தது. அதில் சிறிதளவை பிராந்தி, விஸ்கியை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றி மீண்டும் பழைய நிலையில் சீல் வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கோட்ட மேலாளர் கிருஷ்பு கொடுத்த புகாரின் பேரில் விற்பனையாளர் நாராயணன், 35 மீது செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.